Anushka Sharma reacts after fan leaks video of Virat Kohli's room

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிதற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாடி வருகிறார். இப்போட்டியில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி2 வெற்றி, 1 தோல்வி என மொத்தம் 4 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="60f16da1-ef6a-4f42-885c-da812a22be4c" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500-x-300_6.jpg" />

Advertisment

இந்நிலையில், விராட் கோலியின் ஹோட்டல் ரூமிற்குள் ரசிகர் ஒருவர் நுழைந்து உள்ளிருக்கும் உடைமைகளை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோவைப்பார்த்த விராட் கோலிதனது சமூக வலைதள பக்கத்தில் அதைப் பகிர்ந்து, "ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த வீரர்களைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருப்பார்கள் என்பதையும், அவர்களைச் சந்திப்பதில் ஆர்வமாக இருப்பதையும் நான் புரிந்துகொள்கிறேன்.நான் அதை எப்போதும் பாராட்டுகிறேன். ஆனால் இங்குள்ள இந்த வீடியோ அதிர்ச்சி அளிக்கிறது.

மேலும், இது எனது தனியுரிமையைப் பற்றி மிகவும் வருத்தத்தைக் கொடுக்கிறது. என்னுடையச் சொந்த ஹோட்டல் அறையில் எனக்கு தனியுரிமை இல்லை என்றால், வேறு எங்கு அதை நான் எதிர்பார்க்க முடியும். இந்த வகையான செயல்களை நான் ஏற்பதில்லை. தயவு செய்து மக்களின் தனியுரிமைக்கு மதிப்பளியுங்கள்.அவர்களை வெறும் பொழுதுபோக்கிற்கானப் பொருளாகக் கருத வேண்டாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

கோலி பதிவிட்ட அந்த வீடியோவை அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாதனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டதாவது, "கடந்த காலத்தில் சில ரசிகர்கள் இரக்கமோ கருணையோ காட்டாத சில சம்பவங்களை நானும் அனுபவித்திருக்கிறேன். அது மிகவும் மோசமான விஷயம். சில சுயக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது அனைவருக்கும் நலம். இதே போல் உங்கள் படுக்கையறையில் நடந்தால்சும்மா இருப்பீர்களா" என ஆவேசமாகக் குறிப்பிட்டுள்ளார்.